(றிஸ்வான் சாலிஹு)
தனிமைப்படுத்தல் ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காத்தான்குடி பிரதேசத்தில் நேற்று (03) தொடக்கம் அடை மழை பெய்து வருவதனால் மக்கள் கடும் கஸ்டத்தின் மத்தியில் இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில், காத்தான்குடிக்கு அண்டிய பிரதேசமான காங்கேயனோடை சகோதரர்கள் பல தேவைப்பாடுகளுக்கும் வறுமை நிலையில் இருந்தாலும், அதற்கு அப்பால் காங்கேயனோடை குழுமத்தின் பங்களிப்பாக 300 குடும்பங்களுக்கான இரவு நேர உணவை இன்று காத்தான்குடி மக்களுக்கு வழங்கி வைத்தார்கள்.
இவர்களால் சமைத்த கறி,பாண் போன்ற உணவுகளையே காத்தான்குடி சமூகக் குழுமத்திடம் வழங்கப்பட்டு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளில் முடங்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு வழங்கி வைத்தார்கள்.
தங்களது பிரதேசத்தில் பல தேவைப்பாடுகள் வறுமை நிலைகளையும் தாண்டி எமது பங்களிப்பும் இவர்களுக்குசேர வேண்டும் என்ற தூய நோக்கத்துடன் மனமுவந்து இப்பணிக்கு உதவிய சகோதரர்களுக்கு காத்தான்குடி சமூகம் நன்றிகளை தெரிவிக்கின்றனர்.
காங்கேயனோடை சகோதரர்களினால் சமைத்த உணவு வழங்கப்பட்டது...
Reviewed by Editor
on
January 04, 2021
Rating:
Reviewed by Editor
on
January 04, 2021
Rating:


