இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் நாளை (05) செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவர் இங்கு வருகை தருவதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவின் அழைப்பின் பேரில் இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர்இ தனது விஜயத்தின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷஇ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார்.
வெளிவிவகார அமைச்சரோடும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இரு நாடுகளிலும் நிலவும் கொவிட் -19 பயண கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இந்த விஜயம்ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்!!!
Reviewed by Editor
on
January 04, 2021
Rating:
Reviewed by Editor
on
January 04, 2021
Rating:
