(றிஸ்வான் சாலிஹூ
இலங்கையில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் இரண்டாவது அலையைத் தொடர்ந்து மூடப்பட்டிருந்த பாடசாலைகள் அனைத்தும் தனிமைப்படுத்தல் ஊடரங்கு அல்லாத பகுதிகளில் 2021ஆம் ஆண்டின் முதலாம் தவணைக்காக திங்கட்கிழமை (11) ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.
அதற்கமைய அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிமனையின் கீழ் உள்ள அக்/அஸ்-ஸிறாஜ் ஜூனியர் கல்லூரியில் அதிபர் எஸ்.றினோஸ்டீன் தலைமையில் பாடசாலையை துப்பரவு செய்து தொற்று நீக்கும் செயற்பாடு நேற்று (09) சனிக்கிழமை அஸ்-ஸிறாஜ் ஜூனியர் கல்லூரியில் நடைபெற்றது.
கல்லூரியின் பிரதி அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான பெளதீக மற்றும் சுற்றுச்சூழல் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டார்கள்.
இந்த நடவடிக்கைகள் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரின் மேற்பார்வை மற்றும் ஆலோசனைகளுக்கு அமைய இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
