கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் கொடி இறக்கப்பட்டது.

 


(சர்ஜுன் லாபீர்)

கல்முனை கடற்கரைப் பள்ளி நாகூர் ஆண்டகையின் 199வது கொடியேற்ற நிகழ்வு கடந்த 14ம் திகதி நடைபெற்றது. 12 நாட்களின் பின்னர் இறுதி நாளான இன்றைய தினம் (26) செவ்வாய்க்கிழமை புனித கொடி பக்கீர் ஜமாஆத்தினரின் சலவாத்துடன் இறக்கி வைக்கப்பட்டது.



இந் நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இந் நிகழ்வு இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் கொடி இறக்கப்பட்டது. கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் கொடி இறக்கப்பட்டது. Reviewed by Editor on January 26, 2021 Rating: 5