
நட்சத்திர ஜோடியான சஞ்சீவ்- ஆலியா சமூக வலைத்தளத்தில் போட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது . இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார்? என்பது எதிர்வரும்வரும் ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் தெரியவரும்.
விஜய் டிவி பிரபலங்கள் பலர் ரியோவிற்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களில் பல விஜய் டிவி பிரபலங்கள் ரியோவுக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர் .
அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியின் நட்சத்திர ஜோடியான சஞ்சீவ்- ஆலியா மானசா இருவரும் ரியோவுக்கு 50 வாக்குகள் போட்டதாக சமூகவலைத்தள பக்கத்தில் தெரிவித்திருந்தனர் .
இந்நிலையில் சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘நீ கலக்கு மாமா’ என பதிவிட்டு ஆரியின் புகைப்படத்தை வைத்துள்ளார் . இதிலிருந்து ஆரி டைட்டில் வின்னர் ஆக வேண்டும் என அவர் விரும்புவது போல் தெரிகிறது .
ரியோவிற்கு ஓட்டு போட்டுவிட்டு ஆரிக்கு வாழ்த்து தெரிவித்த இந்த நட்சத்திர ஜோடியின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
Reviewed by Editor
on
January 15, 2021
Rating: