பிரதி தவிசாளர் பார்த்தீபன் மீதான தாக்குதலுக்கும் எனக்கும் தொடர்பில்லை- தவிசாளர் அப்துல் வாசித்.


பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பார்த்தீபன் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிப்பதுடன் குறித்த தாக்குதலுக்கும் எனக்கும் எந்தவிதமான சம்மந்தமுமில்லை என பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் அப்துல் வாசித் தெரிவித்துள்ளார்

ஆளுநர் விசாரணைக்காக விஷேட குழு அமைத்தால் தவிசாளரை தற்காலிகமாக இடைநிறுத்துவதும் பிரதி தவிசாளரை பதில் தவிசாளராக நியமிப்பதும் வழமையானதே. 

இந்த சந்தர்ப்பத்தில் பிரதி தவிசாளரை தாக்குவதற்கான எந்தவித தேவையும் எனக்கு இல்லை எனவும் எனது அரசியல் பயணத்தை தடுப்பதற்காக சுமத்தப்படும் வீண் பழி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த தாக்குதல் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


பிரதி தவிசாளர் பார்த்தீபன் மீதான தாக்குதலுக்கும் எனக்கும் தொடர்பில்லை- தவிசாளர் அப்துல் வாசித். பிரதி தவிசாளர் பார்த்தீபன் மீதான தாக்குதலுக்கும் எனக்கும் தொடர்பில்லை-  தவிசாளர் அப்துல் வாசித். Reviewed by Editor on January 15, 2021 Rating: 5