
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் தோழி சசிகலாவின் தண்டனைக் காலம் முடிவடைந்ததையடுத்து, முறைப்படி நேற்று (27) விடுதலை செய்யப்பட்டுள்ளார். கோப்புகளில் கையெப்பம் பெறப்பட்டு விடுதலை சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட்டது.
மருத்துவமனை வளாகத்தில் திரண்டிருந்த சசிகலா ஆதரவாளர்கள் ஆரவாரம் எழுப்பி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். சிறை தலைமை கண்காணிப்பாளர் சேசவ் மூர்த்தி மற்றும் பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளர் லதா ஆகியோர் சிறையில் இருந்து காலை 9 மணியவில் கிளம்பிச் விக்டோரியா மருத்துவமனைக்குச் சென்று சசிகலா விடுதலைப் பணிகளை முறைப்படி மேற்கொண்டனர்.
மூச்சு திணறல் காரணமாக கடந்த 20 ஆம் தேதி பெங்களூரு சிவாஜிநகர் போவ்ரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலா 21ஆம் தேதி பெங்களூரு கலாசிபால்யாவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டார் அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதும், 21ஆம் தேதி இரவு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து கொரோனா நோயளிகள் சிகிச்சை பெறும் கட்டடத்திற்கு மாற்றப்பட்டார்,
இந்நிலையில் இன்றுடன் சசிகலாவின் தண்டைகாலம் முடிவடைவதால், அவர் மருத்துவமனையில் இருந்தவாறே விடுதலை செய்யப்பட்டார். இதனால், அவரின் ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
