தென்னை மரங்களை வெட்ட இனிமேல் பிரதேச செயலாளரின் அனுமதி பெறுவது அவசியம்


தென்னை மரங்களை வெட்டுவதற்குரிய அனுமதியை, இனிமேல்  பிரதேச செயலாளரிடம் பெற்றுக் கொள்வதை அத்தியாவசியமாக்கி சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெங்கு, கித்துள், பனை தொடர்பான இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது

இது தொடர்பான சட்டமூலம் மற்றும்  சட்டவரைபு, திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதாரன குறிப்பிட்டுள்ளார்.

வீடொன்றை நிர்மாணிக்கும் போது அங்கு காணப்படும் தென்னை மரங்களை வெட்டுவதற்குரிய அனுமதி வழங்கப்படவுள்ளது.

எனினும், தேவையற்ற விதத்தில் தென்னை மரங்களை வெட்டி அகற்றுவதற்கான அனுமதி வழங்கப்படமாட்டாது என தெங்கு, கித்துள், பனை தொடர்பான இராஜாங்க அமைச்சின் செயலாளர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கான சட்டமூலம், பாராளுமன்ற அனுமதிக்காக விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

( மினுவாங்கொடை நிருபர் )
தென்னை மரங்களை வெட்ட இனிமேல் பிரதேச செயலாளரின் அனுமதி பெறுவது அவசியம்  தென்னை மரங்களை வெட்ட இனிமேல் பிரதேச செயலாளரின் அனுமதி பெறுவது அவசியம் Reviewed by Sifnas Hamy on January 28, 2021 Rating: 5