அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகள் விடுவிக்கப்படுகிறது!!



(றிஸ்வான் சாலிஹூ)

தனிமைப்படுத்தல் ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 09 கிராம சேவகர் பிரிவுகளும் இன்று (06) புதன்கிழமை அதிகாலை 5மணி முதல் தனிமைப்படுத்தலிருந்து விடுவிக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று 05, அக்கரைப்பற்று-14, நகர்ப்பிரிவு-03 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும், பாலமுனை 01, ஒலுவில் 02 மற்றும் அட்டாளைச்சேனை 08 ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அத்தோடு, ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று 8/1, அக்கரைப்பற்று 8/3 மற்றும் அக்கரைப்பற்று 9 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளிலும் இன்று தனிமைப்படுத்தல் அகற்றப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவெந்திர சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.



அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகள் விடுவிக்கப்படுகிறது!! அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகள் விடுவிக்கப்படுகிறது!! Reviewed by Editor on January 06, 2021 Rating: 5