இரா.சாணக்கியன் மற்றுமொரு பதவிக்கு அமர்த்தப்பட்டார்!!!



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ இராசமாணிக்கம் சாணக்கியன் கெளரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அவர்களினால் மற்றுமொரு உயர் பதவியில் செவ்வாய்க்கிழமை (05) அமர்த்தப்பட்டுள்ளார்.

அந்த உயர் பதவியானது பாராளுமன்றத்தில் உள்ள மற்றுமொரு ஆலோசனைக்குழுவிற்கு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளமையை குறிப்பிடுகிறது.

இந்த குழுவானது நாட்டின் அபிவிருத்தியிலும் வளர்ச்சியிலும் பங்குகொள்ளும் முகவர் நிறுவனங்களினது நடவடிக்கைகளை கண்காணிக்கும் ஆலோசனைக் குழுவாகும்.

UNDP, USAID, National Democratic Institute (NDI), The International Republic Institute (IRI) மற்றும் The Westminster Foundation for Democracy (WFD) போன்ற முகவர் நிறுவனங்கள் அடங்குகின்றது எனலாம்.

இந்த நாடாளுமன்ற குழுவின் முதலாவது கூட்டமானது இம்மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இரா.சாணக்கியன் மற்றுமொரு பதவிக்கு அமர்த்தப்பட்டார்!!! இரா.சாணக்கியன் மற்றுமொரு பதவிக்கு அமர்த்தப்பட்டார்!!! Reviewed by Editor on January 06, 2021 Rating: 5