இன்றிரவு ஏற்பட்ட பயங்கர விபத்து!!!

 

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம்  நோக்கி சென்ற இலங்கைப் போக்குவரத்து சபை, பயணிகளை இறக்கிவிட்டு கோண்டாவில் சாலைக்கு செல்லும்போது யாழ்ப்பாணம் -ஆணைப்பந்தியூடாக இலுப்பையடிச் சந்தியை (பலாலி வீதி) திடீரென கடந்த கார் மீது மோதியதில் காரில் பயணித்தவர்களில்  ஒருவர் காயமடைந்துள்ளதுடன் கார் கடுமையாக சேதமடைந்துள்ள இச்சம்பவம் நேற்று (21) வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

பயணிகளை இறக்கி விட்டு சாலைக்கு செல்லும் வழியில் பஸ் வந்த வேகத்தில் காரினை மோதியதுடன் தொலைபேசி கம்பம், மின்விளக்கு கம்பம் என அருகில் உள்ள பஸ் தரிப்பு நிலையத்தையும் , அருகில் உள்ள ஆடைகள் விற்பனை நிலையத்தின் முகப்பு பகுதியையும் உடைத்து கொண்டு சென்று மோதி நின்றது. 

இந்நிலையில் ஆடை விற்பனை செய்யும் நிலையத்திற்குள் உறங்கிக் கொண்டிருந்த ஒருவரின் தலையில் அடிபட்டு கடும் காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

அத்தோடு அருகில் இருந்த வாகனம் கழுவும் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரும் தேசமாகிய நிலையிலும் உள்ளது. விபத்துக்குள்ளான பஸ்ஸின் முகப்பு பகுதி கடுமையாக சேதடைந்துள்ளதுடன் ஆசனங்களும் சேதமடைந்துள்ளது.


சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


இன்றிரவு ஏற்பட்ட பயங்கர விபத்து!!! இன்றிரவு ஏற்பட்ட பயங்கர விபத்து!!! Reviewed by Editor on January 22, 2021 Rating: 5