தெற்காசியாவில் இரண்டாவது பெரிய காலுரை ஏற்றுமதி உற்பத்தி நிறுவனம் இலங்கையில் திறந்து வைக்கப்பட்டது. சர்வதேச காலணி சந்தையில் போட்டியிடவுள்ள இலங்கை தயாரிப்பு "yoo brand" காலணி உற்பத்தி தொழிற்சாலை நேற்றைய தினம் மஹிந்த ராஜபக்ச அவர்களால் zoom தொழில்நுட்பத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இத்தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் பாடசாலை பாதணிகள் சந்தை விலையின் 30 வீதம் குறைவாக எதிர்காலத்தில் சதொச விற்பனை நிலையங்களில் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உலகத்தரம் வாய்ந்த பாதணிகளை உருவாக்கும் நோக்கில் இத்தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து பாதணிகளும் Made In Sri Lanka என்ற எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்டே தயாரிக்கப்படும். சுபீட்சத்தின் நோக்கு கொள்கையின்படி, உள்ளூர் பொருளாதாரக் கொள்கைக்குள் இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதை இலக்காக கொண்டுள்ள எமது அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதன் மூலம், எங்கள் உள்ளூர் விவசாயிகளையும் தொழிலதிபர்களையும் முன்னேற்ற இவ்வாறான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் உயர்தர தயாரிப்புகளை நுகரும் வாய்ப்பும் இதனால் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி இத் தொழிற்சாலைகள் இன்று முதல் பாதணிகளை உருவாக்கத் தொடங்கும் போது, இறப்பர் செய்கையாளர்களும் பொருளாதார ரீதியாக பயனடைவார்கள். அவர்களின் குடும்பங்களின் வருமானம் அதிகரிக்கும். அது மட்டுமல்லாமல், நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.
பெரிய காலுரை உற்பத்தி தொழிற்சாலை திறப்பு...
Reviewed by Editor
on
January 21, 2021
Rating:
