(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கொவிட் நோயாளிகளுக்கு சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ள தயார் என்று வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எப்.றஹ்மான் தெரிவித்துள்ளார்.
கொவிட் 19 அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கொவிட் நோயாளிகளுக்கு தேவைப்படின் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எப்.ரஹ்மானின் ஆலோசனைக்கமைய சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் முஹம்மட் சமீமின் கண்கானிப்பின் கீழ் இதற்காக ஒரு தனியான மருத்துவப்பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை நேற்று (20) Appendicitis நோயினால் பாதிக்கப்பட்டுள்ள கொவிட் 19 நோயாளி ஒருவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
