
(றிஸ்வான் சாலிஹூ)
Inspiring Youths இளைஞர் கழகத்தின் மாதாந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சியும் தொழில் வழிகாட்டல் நிகழ்வும் அமைப்பின் தலைவர் எம்.ஏ.எம்.றுஷைத் அலி தலைமையில் இன்று (22) வெள்ளிகிழமை காலை 9:00 மணியளவில் கழகத்தின் வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் அதிதிகளாக அக்கரைப்பற்று பிரதேச செயலக இளைஞர்சேவை உத்தியோகத்தர் எம்.எம்.சமீலுல் இலாஹி, அக்கரைப்பற்று இளைஞர் கழகங்களின் சம்மேளனத் தலைவர் ஏ.எம்.றுக்சான், திறன் அபிவிருத்திஉத்தியோகத்தர்களான எம்.ஐ. றுமைஸா, எம்.கே.எம்.ஹனிபா, நகர் பிரிவு 03 - கிராம உத்தியோகத்தர் எஸ்.டீ.எம். ரிஜான், அமைப்பின் ஆலோசகர்களான என்.எம்.அனஸ் மற்றும் எம்.ஏ.சுஹைப் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
கல்வி, கலாச்சார, மேம்பாட்டு அபிவிருத்திகள் மற்றும் ஒழுக்க நெறி ,போதைஒழிப்பு, விளையாட்டு அபிவிருத்தி, சுற்று சூழல் பாதுகாப்பு, சமகால இளைஞர்களின் சீரான மேம்பாட்டு வழிகாட்டல்கள் போன்ற எதிர்கால திட்டமிடல்கள் பற்றிய இன்றைய நிகழ்வில் ஆராயப்பட்டது.
