தவிசாளர் தோழர் மித்திரன் அவர்களின் தாயார் காலமானார்!


ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தவிசாளர் தோழர் மித்திரன் அவர்களின் தாயார் மரியாம்பிள்ள லூர்த்தம்மா நேற்று (21) காலமானார்.

நவாலியை சொந்த இடமாக கொண்ட அமரர் மரியாம்பிள்ள லூர்த்தம்மா வயது மூப்பின் காரணமாக  தனது 89 ஆவது வயதில் நேற்றையதினம்(21) காலமானார்.

அன்னாரின் பூதவுடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக நவாலியிலுள்ள அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அன்னாரின் இறுதிக்கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்.

இந்நிலையில் அன்னாரின் பிரிவுத்துயரில் அவரது குடும்பத்தினருடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் பங்கெடுத்துக் கொள்கின்றது என்று கட்சியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தனது இரங்கல் உரையில் தெரிவித்துள்ளார்.




தவிசாளர் தோழர் மித்திரன் அவர்களின் தாயார் காலமானார்!  தவிசாளர் தோழர் மித்திரன் அவர்களின் தாயார் காலமானார்! Reviewed by Editor on January 22, 2021 Rating: 5