(றிஸ்வான் சாலிஹு)
அக்கரைப்பற்று இளைஞர் கழக சம்மேளன நிர்வாக தெரிவுக் (புனரமைப்பு) கூட்டம் அக்கரைப்பற்று இளைஞர் சேவை உத்தியோகத்தர் எம்.எம்.ஸமீலுல் இலாஹி அவர்களின் தலைமையில் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் வெள்ளிக்கிழமை (15) நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று உதவி பிரதேச செயலாளர் ஏ.கே.றொசின்தாஜ், அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஏ. முபாரக் அலி, அக்கரைப்பற்று பிரதேச செயலக திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஜ.றுமைஸா, அக்கரைப்பற்று இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் முஹைமீன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது 21 பேர் கொண்ட நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டதுடன் அதன் தலைவராக எம்.எம். றுக்ஸான் தெரிவு செய்யப்பட்டார்.
அக்கரைப்பற்று இளைஞர் கழக சம்மேளன நிர்வாக தெரிவு!!
Reviewed by Editor
on
January 16, 2021
Rating:
