"நாளையே தினமே இறுதி தீர்மானம் எடுக்கப்படும் - மாகாண சுகாதார பணிப்பாளர் தெரிவிப்பு


(ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் ‘காத்தான்குடி பொலிஸ் பிரிவு முடக்கம்’ தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ள நிலையில், இது குறித்து கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர். ஏ.லதாகரனை  தொடர்பு கொண்டு கேட்டபோது அவ்வாறு பின்வருமாறு விளக்கமளித்தார்.

‘இவ்வாறான விடயங்கள் தொடர்பில் பொலிஸ் தரப்பினர் தெரிவிக்கும் போது பொலிஸ் பிரிவு என்றே கூறுவர். அது அவர்களது வழமையான நடைமுறை.

ஆனால், அந்தப் பொலிஸ் பிரிவின் எந்தெந்த பிரதேசங்களை முடக்க வேண்டுமென்பது தொடர்பில் கள நிலைமைகளைக் கருத்தில் கொண்டு சுகாதாரத் தரப்பினரே தீர்மானிப்பர்.

இதனடிப்படையிலேயே காத்தான்குடி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.

மேலும், நாளை மறுதினம் (18) திங்கட்கிழமை காத்தான்குடி நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து முடக்கத்தை நீடிப்பதா, இல்லையா அல்லது சில பகுதிகளை விடுவித்து சில பகுதிகளை தொடர்ந்து முடக்கி வைப்பதா என்பது தொடர்பில் சுகாதாரத்துறையினர் தீர்மானிப்பர்.

நாளை (17) இரவு கிடைக்கும் சோதனை அறிக்கைகளின் அடிப்படையிலேயே இந்த தீர்மானங்களை சுகாதாரத்துறையினர் முன்னெடுப்பர் என கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர்.ஏ.லதாகரன் தெரிவித்துள்ளார்.


"நாளையே தினமே இறுதி தீர்மானம் எடுக்கப்படும் - மாகாண சுகாதார பணிப்பாளர் தெரிவிப்பு "நாளையே தினமே இறுதி தீர்மானம் எடுக்கப்படும் - மாகாண சுகாதார பணிப்பாளர் தெரிவிப்பு Reviewed by Editor on January 16, 2021 Rating: 5