
(றிஸ்வான் சாலிஹூ)
புத்தசான சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் அனுசரணையுடன் அக்கரைப்பற்று கலாசார மத்திய நிலையத்தினால் நடாத்தப்படும் 2021ஆம் ஆண்டுக்கான திறன் அபிவிருத்திப் பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளது என்று அக்கரைப்பற்று கலாசார மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இதில் சிங்களம், கர்நாடக சங்கீதம், சீனடி, சிலம்படி, அரபு எழுத்தணிக்கலை, புதிய படைப்பும் கிராமிய நடனமும், றபான் நடனம், கிராமிய சங்கீதம் மற்றும் சித்திரம் ஆகிய பாடநெறிகள் கற்பிக்கப்படவுள்ளது.
பாடசாலையில் கல்வி பயில்வோர், பாடசாலையை விட்டு வெளியேறியவர்கள், அரச அலுவலகங்களில் சேவையாற்றுவோர் போன்றோர் இப்பாட நெறிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
பாடநெறிகள் அனைத்தும் எதிர்வரும் 2021.02.01ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படும் எனவும் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
பாடநெறிகள் அனைத்தும் இலவசமாகவே கற்பிக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Reviewed by Editor
on
January 17, 2021
Rating: