
(றிஸ்வான் சாலிஹூ)
புதிய ஆண்டில் அரச அலுவலகங்களில் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வுகள் இன்று (01) வெள்ளிக்கிழமை காலை மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திரு.வ.வாசுதேவன் தலைமையில் சுகாதார வழிமுறைகளுக்கு அமைய நடைபெற்றது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் தேசிய கொடியேற்றப்பட்டு உத்தியோகத்தர்களின் அரசாங்க சேவை சத்திபிரமான உறுதி மொழியினை பெற்று கொள்ளும் நிகழ்வும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற புது வருட நிகழ்வு
Reviewed by Editor
on
January 01, 2021
Rating:
