புதிய சுகாதார வைத்திய அதிகாரியாக நியமனம்

 


(எம்.எஸ்.எம்.நூர்தீன்)

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரியாக டாக்டர் ஏ.எல்.நபீல் இன்று (01) வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக சுகாதார வைத்திய அதிகாரியாக டாக்டர் ஆசாத் ஹசன் தொடர்ந்து கடமையாற்றுகின்றார். சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய டாக்டர் மீராமுகைதீன் பாலமுனை வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

டாக்டர் ஏ.எல்.நபீல் பாலமுனை வைத்தியசாலையில் கடமையாற்றி வந்தார் என்பதுடன் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் இந்த இடமாற்றத்தினை செய்துள்ளது.

மேற்படி டாக்டர் நபீல் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன முன்னாள் தலைவரும் காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப்பள்ளிவாயலின் தலைவருமான சிரேஷ்ட உலமா மௌலவி ஏ.எல்.ஆதம்லெவ்வை பலாஹி அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய சுகாதார வைத்திய அதிகாரியாக நியமனம் புதிய சுகாதார வைத்திய அதிகாரியாக நியமனம் Reviewed by Editor on January 01, 2021 Rating: 5