இறந்தவர்களின் உடல்கள் கட்டாயம் தகனம் செய்யப்படும்


கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை  கட்டாயமாக தகனம் செய்யும் நிலைப்பாட்டில் இருந்து இலங்கை அரசாங்கம் விலக வேண்டும் என, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ள நிலையில், தமது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என, அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவை ஊடகச் சந்திப்பில் அமைச்சரவை இணைப் பேச்சாளர் கெஹேலிய ரம்புக்வெல்ல இன்று கருத்துரைக்கும் போது, சுகாதாரத்துறை அதிகாரிகள் வழங்கிய நடைமுறைகளையே அரசாங்கம் பின்பற்றி வருகிறது எனவும் தெரிவித்தார். 

இந்நிலையில், ஐ. நா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இலங்கை இன்று பதில் அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இறந்தவர்களின் உடல்கள் கட்டாயம் தகனம் செய்யப்படும் இறந்தவர்களின் உடல்கள் கட்டாயம் தகனம் செய்யப்படும் Reviewed by Sifnas Hamy on January 26, 2021 Rating: 5