எரிபொருள் விலைகளை அதிகரிப்பது தொடர்பாக இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
2003 ஆம் ஆண்டு 26 ஆம் இலக்க பெற்றோலிய வளங்கள் சட்டத்தை செல்லுபடியற்றதாக்கி புதிய சட்டத்தை தயாரிப்பதற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
இந்நிலையில் எரிபொருள் விலைகளை அதிகரிப்பது தொடர்பாக அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதா என அமைச்சரவை முடிவை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல, அமைச்சரவையில் இந்த விடயம் தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
எரிபொருள் விலைகளை அதிகரிப்பது தொடர்பாக அரசாங்கத்தின் அறிவிப்பு...!
Reviewed by Sifnas Hamy
on
January 26, 2021
Rating:
