
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு எதிரான வழக்கினை சட்டமா அதிபர் இன்று (11) திங்கட்கிழமை வாபஸ் பெற்றுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட ஆறு பேருக்கு எதிராக சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் ஏற்கனவே செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான விசாரணைகள் கடந்த பல ஆண்டுகளாக இடம்பெற்று வந்த நிலையில் மீண்டும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகிய அரச சட்டத்தரணிகள், குறித்த வழக்கினை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்கள்.
பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் உட்பட ஆறு பேருக்கு எதிரான வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றித்தினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
January 11, 2021
Rating: