(றிஸ்வான் சாலிஹூ)
அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிமனையின் ஆரம்ப கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளரும், அக்/அஸ்-ஸிறாஜ் ஜூனியர் கல்லூரியின் PSI இணைப்பதிகாரியுமாக இருந்து கடந்த 2020.11.12ஆம் திகதி தனது கல்விப் பணியிலிருந்து ஓய்வு பெற்றுச் சென்ற எம்.ஏ.அபுதாஹீர் சேர் அவர்களுக்கு, அக்/அஸ்-ஸிறாஜ் ஜூனியர் கல்லூரியால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரியாவிடை நிகழ்வு கல்லூரி அதிபர் எஸ்.றினோஸ்டீன் தலைமையில் இன்று (30) சனிக்கிழமை காலை கல்லூரி ஆதாரணை மண்டபத்தில் இடம்பெற்றது.
பாடசாலை மாணவி செல்வி.அ.ஐ.ஆலியா கிறாஆத் ஓதி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.
நிகழ்வில் வரவேற்புரையை பாடசாலை பிரதியதிபர் ஜனாப்.சதாத் நிகழ்த்தினார்.
நிகழ்வுக்கு தலைமை வகித்த அதிபர் எஸ்.றினோஸ்டீன் உரையாற்றுகையில்,
நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்த அக்கரைப்பற்று கல்விப் பணிமனையின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (நிர்வாகம்) ஏ.ஜீ.பஸ்மீல் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்..
நிகழ்வின் கதாநாயகன் எம்.ஏ.அபுதாஹூர் சேர் உரையாற்றுகையில்,
பாடசாலை ஆசிரியர்களினால் ஓய்வு பெற்ற உதவிக்கல்விப்பணிப்பாளர் அவருக்கான வாழ்த்துப்பா மற்றும் கவிதைகளும் வாசிக்கப்பட்டு அவரிடம் அவைகள் வழங்கப்பட்டதோடு, பாடசாலை சார்பில் கதாநாயகன் அபுதாஹீர் சேர் பொன்னாடை போர்த்தியும், நினைவுப் பரிசில்கள் வழங்கியும் கெளரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிமனையின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜீ.பஸ்மில் அவர்களும், விசேட அதிதிகளாக வலய வழிகாட்டல் ஆலோசனைக்கான ஆசிரிய ஆலோசகர் எம்.ஏ.தாஹீர், ஆரம்ப கல்வி ஆலோசகர் எஸ்.எல்.மன்சூர், தகவல் தொழில்நுட்ப பாட ஆசிரிய ஆலோசகர் எம்.ஐ.நாஸர், கல்வியலாளர் அஃபர் முஸ்தபா, பாடசாலை பிரதி அதிபர், சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட ஆசிரியர்கள், பயிலுனர் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழு செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.