(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
கல்முனை பொதுச்சந்தையை திறப்பது
சம்பந்தமான கலந்துரையாடலொன்று இன்று (20) புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கல்முனை ஆசாத் பிளாசா வரவேற்பு மண்டபத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே இக்கலந்துரையாடலில் கல்முனை பொதுச் சந்தையில் வியாபாரம் மேற்கொள்ளும் சகல வர்த்தகர்களும் கலந்து கொள்ளுமாறும் பொதுச் சந்தையை அண்டிய பகுதிகளில் கடைகள் வைத்திருக்கும் வர்த்கர்களும் சேர்ந்து பங்கு கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளப் படுகின்றனர்.
அத்துடன் இக்கலந்துரையாடலில் பங்குபற்றாத வர்த்தகர்கள் வியாபாரத்திற்கு அனுமதிக்கப்படமாட்டார்ர்கள் எனவும் இக்கலந்துரையாடலில் கடை உரிமையாளர் மற்றும் கடையில் வேலை செய்யும் ஊழியர்கள் உட்பட சகலரும் பங்குபற்றல் வேண்டும் எனவும் பங்கு பற்றுபவர்கள் தங்களுடைய வருகை பெயர், மற்றும் முகவரியுடன் பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் முழுமையான சுகாதார வழிமுறைகள் கை கழுவுதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பேணல் போன்ற நடைமுறைகள் பின்பற்றி கலந்து கொள்ளுமாறும் கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்கத்தின் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
