வாழைச்சேனை பிரதேச சபையின் புதிய தவிசாளர் பதவியை பொறுப்பேற்றார்!!!


மட்டக்களப்பு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் புதிய தவிசாளர் தர்மலிங்கம் யசோதரன் இன்று (18) தனது கடமையை உத்தியோகபூர்வமாக பதவியேற்றார்.

சிறிலங்கா சுதந்திர கட்சியினை சேர்ந்த இவர், இதற்கு முன்னர் இதே சபையில் பிரதி தவிசாளராக இருந்தவராவார்.

பிரதேச சபையில் ஏற்பட்டிருந்த சிக்கல் நிலையை தீர்ப்பதற்கு விசாரணையொன்றை மேற்கொள்ளும் முகமாக கிழக்கு மாகாண ஆளுநரின் 08.01.2021ஆம் திகதிய வர்த்தமானி அறிவித்தலின்படி முன்னாள் தவிசாளராக கடமையாற்றிய திருமதி சோபா ஜெயரஞ்சித்தின் தவிசாளர் பதவி தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டு உப தவிசாளருக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



 

வாழைச்சேனை பிரதேச சபையின் புதிய தவிசாளர் பதவியை பொறுப்பேற்றார்!!! வாழைச்சேனை பிரதேச சபையின் புதிய தவிசாளர் பதவியை பொறுப்பேற்றார்!!! Reviewed by Editor on January 18, 2021 Rating: 5