சுகாதார அமைச்சில் குடும்பநல சுகாதார சேவை அதிகாரி பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. குடும்பநல சுகாதார சேவை அதிகாரி பதவிக்கான பாடத்திட்ட பயிற்சிகளுக்கான விண்ணப்பங்களை மின்னஞ்சல் ஊடாக பெற்றுக் கொள்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
2015/2016 அல்லது 2017 ஆம் ஆண்டுகளில் க.பொ.த. உயர்தரப்பரீட்சையில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்ற திருமணமாகாத மாணவிகள் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பங்கள் 01.02.2021ஆம் திகதி வரை இணையத்தின் ஊடாக ஏற்றுக்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலதிக தகவல்களை 08.01.2021ஆம் திகதிய அரச வர்த்தமானி மற்றும் www.health.gov.lk என்ற இணையத்தளத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ மாது பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது
Reviewed by Editor
on
January 04, 2021
Rating:
Reviewed by Editor
on
January 04, 2021
Rating:
