புள்ளிக் கணிப்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கல்


(எஸ்.அஷ்ரப்கான்)

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் புள்ளிக் கணிப்பாளர்களாக புதிதாக அம்பாறையில் 09 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின்  அம்பாறை காரியாலயத்தில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (30) சனிக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக  ஸ்ரீலங்கா கிரிக்கெட் புள்ளிக்கணிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் சன்ஜய ஜயசிங்க கலந்து சிறப்பித்தார். அத்தோடு சங்கத்தின் உயர்பீட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

அம்பாறை மாவட்டத்தில் சிங்களவர்கள் 06 பேரும், முஸ்லிம்கள் 02 பேரும், தமிழர் (01) ஒருவருமாக மொத்தம் 09 பேர்    ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் புள்ளிக்கணிப்பாளர்களாக அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

போட்டிப் பரீட்சைகளில் சித்தியடைந்த புள்ளிக் கணிப்பாளர்களுக்கே இவ்வாறு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.  இவர்களுக்கான சான்றிதழ்கள் இந்நிகழ்வின் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.

புள்ளிக் கணிப்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கல் புள்ளிக் கணிப்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கல் Reviewed by Editor on January 31, 2021 Rating: 5