லக்கி விளையாட்டு கழகத்தின் புதிய நிர்வாக தெரிவு



(றிஸ்வான் சாலிஹூ)

அட்டாளைச்சேனை லக்கி விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும், புதிய நிரவாக சபைத் தெரிவும் கழகத் தலைவரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான எஸ்.எம்.அறூஸ் தலைமையில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க கூட்ட மண்டபத்தில் நேற்றிரவு (30) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஸர்ரப் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கௌரவ அதிதிகளாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபுர், அறபா வித்தியாலய அதிபர் ஏ.எல்.அன்ஸார். பாராளுமன்ற உறுப்பினர் முஸர்ரபின் இணைப்புச் செயலாளர் யுசுப் நியாஸ், விளையாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.எம்.அஸ்வத் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு  பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஸர்ரப் லக்கி விளையாட்டுக் கழகத்தினரால்  பொன்னாடை போர்த்திக் கௌரவிப்பட்டதுடன், வாழ்த்துப்பத்திரமும் கையளிக்கப்பட்டது.

அத்தோடு 2020ம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரா்களாகத் தெரிவு செய்யப்பட்ட  வீரா்களுக்கு பாராளுமன்ற உறுப்பினரால்  கிண்ணங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

எதிர்வரும் 4ம் தி்கதி கொண்டாடப்படவுள்ள இலங்கையின் சுதந்திர தினத்தையொட்டி கடின பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கான கிண்ணமும் இங்கு கிரிக்கெட் அணியின் தலைவர் சஜாத்திடம் கலந்து கொண் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


புதிய நிர்வாக சபையின் தெரிவுகள் வருமாறு,

தலைவர்   - எஸ்.எம்.அறூஸ்

உப தலைவர்  - ஏ.ஆர்.எம்.சியாத்

செயலாளர்  - ஐ.எல்.நௌசாத்

உப செயலாளர் - எம்.எம்.எம்.மினான்

பொருளாளர் - யு.எல்.முனாப்

அமை்ப்பாளர் - எம்.எல்.அன்ஸார்


நிர்வாகக் குழு அங்கத்தவர்கள்

எஸ்.எம்.றிப்னாஸ்

எஸ்.எம்.அஜூஹான்

ரதீஸ் சபான்

எம்.சரோஸ்

எம்.தாரீக்

எம்.றிப்கி


விளையாட்டுக் குழுத்தலைவர்கள்


கிரிக்கெட்


எல்.எம்.சஜாத்


உதைபந்து


ஐ.எல்.நியாஸ்


மெய்வல்லுனர்


ஏ.கே.ஹாதீக்


கரப்பந்து


எம்.முஸர்ரப்


எல்லே


அஸ்மத்


கபடி


ஏ.எம்.அஸாம்


போசகர் - கௌரவ சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஸாரப் எம்.பி, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்.


ஆலோசகர்கள்-

எஸ்.எம்.ஏ.கபுர் -சிரேஸ்ட சட்டத்தரணி

எம்.எச்.எம்.ஹஸான் றுஸ்தி - சட்டத்தரணி

எம்.எச்.எம்.கியாஸ் - ஆசிரியர்

எம்.எச்.எம்.அஸ்வத் - விளையாட்டு உத்தியோகத்தர் - அட்டாளைச்சேனை பிரதேச செயலகம்.

லக்கி விளையாட்டு கழகத்தின் புதிய நிர்வாக தெரிவு லக்கி விளையாட்டு கழகத்தின் புதிய நிர்வாக தெரிவு Reviewed by Editor on January 31, 2021 Rating: 5