பராக்கிரம சமுத்திரத்தின் நீர் மட்டம் அதிகரிப்பு...



இன்று (09) காலை முதல் பெய்து வரும் பலத்த மழை காரனமாக பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் நீர் மட்டம் சடுதியாக அதிகரித்து காணப்படுகிறது.

சமுத்திரத்தின் வான் கதவுகளில் எட்டு ஒரு அடி உயரம் வரை திறந்திவிடப்பட்டுள்ளது. இதனால் தாழ் நில பிரதேசங்கள் நீரில் மூழ்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கல்லேல்லை, முஸ்லிம் கொலனி மாணிக்கப்பிட்டி தாழ் நில பகுதிகளில் வதிவோர் அவதானமாகவும் முன் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு வேண்டப்படுகின்றார்கள்.


பராக்கிரம சமுத்திரத்தின் நீர் மட்டம் அதிகரிப்பு... பராக்கிரம சமுத்திரத்தின் நீர் மட்டம் அதிகரிப்பு... Reviewed by Editor on January 09, 2021 Rating: 5