இன்று (23) முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை மூன்று நாட்கள் பாராளுமன்றம் கூடும் என்று நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், இன்று 23 ஆம் திகதி, கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி விவாதத்துக்கு எடுக்கப்பட்டு ஒத்திவைக்கட்ட இரத்தினக்கல் மற்றும் ஆபரண சட்டம் தொடர்பான ஒழுங்குவிதி குறித்த விவாதம் மு.ப. 11.30 முதல் பி.ப. 1.00 மணி வரை இடம்பெறும்.
இன்று மு.ப. 10.00 மணிக்கு பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகும் அதேவேளை, மு.ப. 10.00 மணிமுதல் 11.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாவுக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாளை (24) பாராளுமன்றம் மு.ப. 10.00 மணிமுதல் மு.ப. 11.30 மணி வரை இடம்பெறுவதுடன், நாளை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான வினாவுக்கு மாத்திரம் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி 25 ஆம் திகதி மு.ப. 10.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை முன்னாள் சபாநாயகர் டபிள்யு.ஜே.எம். லொக்குபண்டார அவர்களின் மறைவு தொடர்பான அனுதாபப் பிரேரணை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reviewed by Editor
on
February 23, 2021
Rating:
