
சிறுபான்மையினரின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக பொத்துவில் ஆரம்பித்து பொலிகண்டி வரையான தொடர் போராட்டத்தின் 5 ஆம் நாள் இன்று (07) ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் ஆரம்பமாகியுள்ளது.

யாழ்ப்பாணம் பொலிகண்டியை சென்றடையவுள்ள இன்றைய போராட்டத்தில் சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், வடக்கு, கிழக்கைச் சேர்ந்த பல தமிழ் அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
அரசியல் கைதிகளின் விடுதலை, பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனமாக ஆயிரம் ரூபாவை வழங்கல், காணிவிடுவிப்பு, அத்துமீறிய குடியேற்றம், நிரந்தர அரசியல் தீர்வு, முஸ்லிம்களின் மத உரிமைகளுக்கு மதிப்பளித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு நிரந்தரத் தீர்வை கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
February 07, 2021
Rating: