
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஆசிரியர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பெரியகல்லாறு 02, கனடியன் வீதியைச் சேர்ந்த 30 வயதையுடைய களுவாஞ்சிகுடியில் உள்ள பிரபல பாடசாலையென்றில் ஆரம்பப் பிரிவில் கடமையாற்றிவந்த ஆங்கில ஆசிரியரொருவரே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குடும்ப பிரச்சினை தொடர்பில் கடிதம் ஒன்றினை எழுதி வைத்துவிட்டு இவர் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவானின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற களுவாஞ்சிகுடி பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் படி பொலிஸாரிடம் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை களுவாஞ்சிகுடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
(நன்றி - தினகரன்)
