பிளாஸ்ட்டிக், பொலித்தீன் பொருட்களுக்கு மார்ச் 31 முதல் தடை


பிளாஸ்ட்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்கள் சிலவற்றைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான  வர்த்தமானி அறிவித்தல், சுற்றாடல் துறை அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
 
இதன்படி, வர்த்தகம் மற்றும் கைத் தொழில்களில், விவசாய இரசாயணப் பொருட்களைப் பொதியிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் 
Polyethylene terephthalate மற்றும் PVC வகைகளுக்கு, எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
எனினும், மருந்து வகைகள் மற்றும் உணவு வகைகளைப் பொதியிடுவதற்குப் பயன்படுத்தப்படுகின்ற பொலித்தீன்களுக்குத் தடை விதிக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
அத்துடன், பலூன்கள், பந்துகள், நீரில் மிதக்கக் கூடிய அல்லது நீரில் விளையாடக் கூடிய பொருட்கள் மற்றும் நீர் விளையாட்டுத் துணைப் பொறிகளுக்கு  தடை விதிக்கப்படவில்லை என்றும்  குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மேலும், மருத்துவ அல்லது நோய் அறிகுறி சார்ந்த சிகிச்சைகளுக்காகப் பயன்படுத்தப்படும் பிளாஸ்ட்டிக் cotton bud என்பனவும் இதில் உள்வாங்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )
பிளாஸ்ட்டிக், பொலித்தீன் பொருட்களுக்கு மார்ச் 31 முதல் தடை  பிளாஸ்ட்டிக், பொலித்தீன் பொருட்களுக்கு மார்ச் 31 முதல் தடை Reviewed by Sifnas Hamy on February 01, 2021 Rating: 5