கட்டுநாயக்கவில் தீ விபத்து, 7 தீயணைப்பு வண்டிகள் தீயணைக்கும் பணியில்

 


கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றின் ஆய்வகத்தில தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தானது, (03)  அதிகாலை 4.45 மணியளவிலேயே இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தினையடுத்து தீப் பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில், கொழும்பு தீயணைப்புப் படையினரும், தீயணைப்பு வாகனங்களும் விரைந்து செயற்பட்டுள்ளனர். ஏழு  தீயணைப்பு வண்டிகள் கடமையில் ஈடுபட்டுள்ளன.

தீ விபத்துக்கான காரணங்கள் தெரியாத நிலையில், தீப் பரவலினால் உண்டான சேத விபரங்களும் இன்னும் மதிப்பிடப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )
கட்டுநாயக்கவில் தீ விபத்து, 7 தீயணைப்பு வண்டிகள் தீயணைக்கும் பணியில் கட்டுநாயக்கவில் தீ விபத்து, 7 தீயணைப்பு வண்டிகள் தீயணைக்கும் பணியில் Reviewed by Sifnas Hamy on February 04, 2021 Rating: 5