சுகாதார பணியாளர் விபத்தில் மரணம்



மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் பகுதியில் நேற்று (3) காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் அடம்பன் பிரதேச வைத்தியசாலையில் சுகாதார பணி உதவியாளராக கடமையாற்றும் அடம்பன் பகுதியை சேர்ந்த ரி.எம். சல்மான் (29) என்பவர் உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

உயிலங்குளம் பள்ளமடு பிரதான வீதியூடாக வந்த கனரக வாகனவும், அடம்பனில் இருந்து தனது பணியை முடித்து விட்டு வீடு திரும்பி மன்னார் வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிளும் மோதியே இந்த விபத்து ஏற்பட்டது. விபத்தில் படுகாயமடைந்த குறித்த இளைஞன் அடம்பன் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த கனரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு,மேலதிக விசாரனைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சுகாதார பணியாளர் விபத்தில் மரணம் சுகாதார பணியாளர் விபத்தில் மரணம் Reviewed by Editor on February 04, 2021 Rating: 5