ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நான்கு வருட பூர்த்தியை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இளைஞர், யுவதிகள் மாநாடும் முல்லைத்தீவு தொகுதிக்கான சம்மேளனக் கூட்டமும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களின் தலைமையில் முல்லைத்தீவு நகர பிரதேச சபை மண்டபத்தில் நேற்று (31) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குறித்த நான்காண்டு பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற சம்மேளனக் கூட்டத்தில் ஆளும் கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ ஜெயரத்ன ஹேரத், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ க.கனகரத்தினம், முல்லைத்தீவு தொகுதிக்கான செயற்குழு உறுப்பினர்கள், முல்லைத்தீவு பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலரும் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாவட்ட இளைஞர், யுவதிகள் மாநாடும், சம்மேளனக் கூட்டம்!!!!
Reviewed by Editor
on
February 01, 2021
Rating:
Reviewed by Editor
on
February 01, 2021
Rating:

