கல்முனை ரஹ்மத் சமூக சேவை அமைப்பினால் வருடாவருடம் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் வேலைத்திட்டம் தற்போது முன்னேடுக்கப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தின் மற்றுமொரு கட்டத்தினை கல்முனை சர்பான் மோட்டார்ஸ் உரிமையாளரும் மற்றும் கல்முனை ரியல் இஸ்டார் இளைஞர் கழகத்தின் தலைவரும் ரஹ்மத் சமூக சேவை அமைப்பின் கல்முனைக்கான இளைஞர் அமைப்பாளருமான முஹம்மட் சர்பான் அவர்களின் விஷேட வேண்டுகோளுக்கு இணங்க தேவைப்பாடுள்ள மாணவர்களுக்கு இப்பாடசாலை கற்றல் உபகரணங்கள் அடங்கிய பொதிகளை கல்முனை மாநகர சபை பிரதி மேயரும் கல்முனை ரஹ்மத் பவுன்டேசனின் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்களினால் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.
தற்போதைய நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக நாட்டின் சுகாதாரத்துறையினரின் முழு வழிகாட்டுதலுக்கும் ஏற்ப சுகாதாரத்துறை வைத்தியரின் முழு அனுமதியினைப் பெற்று இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
Reviewed by Editor
on
February 01, 2021
Rating:


