(றிஸ்வான் சாலிஹூ)
முன்னாள் பெருந்தெருக்கள் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களது பத்து கோடி ரூபா விசேட நிதி ஒதுக்கீட்டில் மஞ்சந்தொடுவாய் ஆரையம்பதி உட்பட்ட காத்தான்குடி ஊர்வீதிக்கான நவீன மின்விளக்குகள் பொருத்தும் பணி வீதி இன்று (12) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் நிர்மனிக்கப்பட்ட இந்த வேலைத் திட்டம் காத்தான்குடி நகர முதல்வர் கௌரவ எஸ்.எச்.எம். அஸ்பர் JP தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், காத்தான்குடி நகரசபை உறுப்பினர்கள் பொதுமக்கள் என அனைவரது பிரசன்னத்துடன் இன்று ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து முன்னாள் ஆளுநர் கௌரவ ஹிஸ்புல்லாஹ் அவர்களால் ஒளிர விடப்பட்டது.
இன்று முதல் தினமும் மாலை 6மணிமுதல் காலை 6மணிவரை தனியங்கி முறையில் இந்த மின்விளக்குகள் காத்தான்குடி ஊர் வீதியை ஒளியூட்டவுள்ளன என்று நகர சபை முதல்வர் அஸ்பர் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கான தனது பணியை ஆரம்பித்த முன்னாள் ஆளுநர்!!!
Reviewed by Editor
on
February 12, 2021
Rating:
