பொத்துவில் புதிய தவிசாளராக அப்துல் ரஹீம் தெரிவு

 

பொத்துவில் பிரதேச சபையின் புதிய தவிசாளராக அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் முதுநபீன் அவர்களுக்கு பூரண ஆதரவு தெரிவித்து அவரோடு இணைந்த எம்.எச்.அப்துல் றஹீம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.




2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் சரியான முறையில் நிறைவேற்றப்பட வில்லை என தெரிவித்து புதிய தவிசாளர் தெரிவு இன்று (12) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போதே 13 வாக்குகளால் அப்துல் ரஹீம் புதிய தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார்.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய நான், அகில இலங்கை மக்கள் காங்கிரசில் உத்தியோகபூர்வமாக இணையவுள்ளதாகவும் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட அப்துல் ரஹீம் தெரிவித்துள்ளார்.


பொத்துவில் புதிய தவிசாளராக அப்துல் ரஹீம் தெரிவு பொத்துவில் புதிய தவிசாளராக அப்துல் ரஹீம் தெரிவு Reviewed by Editor on February 12, 2021 Rating: 5