இன்று 09.02.2021ம் திகதி இடம் பெற்ற காத்தான்குடி நகருக்கான கொவிட் 19 தடுப்பு செயலணியின் கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கடந்த 40 நாட்களாக காத்தான்குடி நகரில் அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கானது இன்று விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பின்வரும் விடயங்களை நடைமுறைப்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
1. சகல வர்த்தக நிலையங்களும் வழமை போன்று திறப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதுடன், கடைகளுக்கு வெளியில் கைகளை தொற்று நீக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளையும் சமூக இடைவெளியினை பேணுவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்வதுடன் கடைகளில் காணப்படும் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருத்தல் வேண்டும்.
2. ஹோட்டல்கள், பேக்கரிகள் மற்றும் உணவகங்கள் அனைத்திலும் சுகாதார நடைமுறைகளுடன் முறையான சமூக இடைவெளியினைப்பேணி வழமை போன்று தங்கள் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
3. பள்ளிவாயல்கள் அனைத்தும் கலாச்சாரத்திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய தொழுகைக்காக திறக்க முடியும்.
4. பாடசாலைகள் அனைத்தும் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்க முடியும்.
5. தனியார் கல்வி நிலையங்கள், மதரசாக்கள், குர்ஆன் மதரசாக்கள் மற்றும் பாலர் பாடசாலைகள் போன்றன சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தால் வழங்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளுடன் மீண்டும் ஆரம்பிக்க முடியும்.
6. சகல பொதுச்சந்தைகளும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தால் வழங்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளுடன் மீண்டும் ஆரம்பிக்க முடியும்.
7. திருமண, வலிமா நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் போது சுகாதார வைத்திய அதிகாரியின் முறையான அனுமதியினைப்பெற்று சுகாதார நடைமுறைகளுடன் நடாத்த முடியும்.
8. வீடு, கட்டுமானப்பணிகள், அதனோடு தொடர்புடைய அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபடுவோர் (மேசன், ஓடாவி மற்றும் ஏனைய கூலி தொழிலாளிகள்) மற்றும் வீதி வியாபாரத்தில் ஈடுபடுவேர் என அனைவரும் காத்தான்குடி நகர சபையில் தங்களை பதிவு செய்து முறையான அனுமதியினைப்பெறறுக்கொண்ட பின்னர் வேலைகளில் ஈடுபட முடியும்.
மேற்படி தீர்மானங்களை சகல பொதுமக்களும் கண்டிப்பாக பின்பற்றவதுடன். கடந்த 40 நாட்களாக எமது பிரதேசம் முழுமையாக முடக்கப்பட்டு அதனால் நாம் அடைந்த துன்பங்கள் மீண்டும் எமது பிரதேசத்திற்கு ஏற்படாவண்ணம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தால் வழங்கப்படும் சுகாதார நடைமுறைகளை எப்போதும் கண்டிப்பாக பின்பற்றக்கூடிய சமூகமாக மாற்றமடைவோம் என உறுதிபூனுவதோடு கொரானாவுடன் கூடிய வாழ்க்கை முறையே எதிர்காலத்தில் சாத்தியமான நிரந்தர தீர்வு என்பதை எப்போதும் மனதில் வைத்துக்கொள்வோமாக.
நன்றி, இவ்வண்ணம்.
நகர முதல்வர்,
நகர சபை,
காத்தான்குடி.
Reviewed by Editor
on
February 09, 2021
Rating:
