(றிஸ்வான் சாலிஹூ)
அக்கரைப்பற்று அல் -கமர் வித்தியாலயத்தில் முதலாம் ஆண்டுக்கு புதிய மாணவர்களை ஊக்குவிப்பதற்காக கல்வியமைச்சின் பரிந்துரைக்கு அமைவாக சுகாதார வழிமுறைகளை பின்பற்றி கற்கை தொடக்க விழா இன்று (15) திங்கட்கிழமை பாடசாலை அதிபர் எச்.தாலீப் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.றாசிக் அவர்களும், கெளரவ அதிதியாக பிரதேச சபை உறுப்பினர் ரீ.எம் ஐய்யுப் அவர்களும், விசேட அதிதிகளாக அக்கரைப்பற்று வலய கோட்டக் கல்வி பணிப்பாளர் எம்.ஏ.கலிலுர்ரஹ்மான், உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம். ஜெமீல் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கல்வி அமைச்சின் பரிந்துரைக்கு அமைவாக மாணவர்களினால் மரக்கன்றுகள் நடப்பட்டும், மாணவர்களுக்குரிய அன்பளிப்புகளும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
