ஸாஹிறா வித்தியாலயத்தில் மாணவர்களை அறிந்து கொள்வோம் முதலாவது நாள் நிகழ்வு

 



(றிஸ்வான் சாலிஹூ)

அக்கரைப்பற்று அஸ்-ஸாஹிறா வித்தியாலயத்தில் 2021ஆம் ஆண்டில் தரம் ஒன்றில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் "மாணவர்களை அறிந்துகொள்வோம் செயற்பாட்டின்" முதல் நாள் நிகழ்வு இன்று (15) திங்கட்கிழமை பாடசாலையின் அதிபர் ஜனாப் எம்.ஐ.எம்.இல்யாஸ் தலைமையில் இடம்பெற்றது. 



இந்நிகழ்வில் அக்கரைப்பற்று கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.கலீலுர் ரஹ்மான் அவர்களும்,வழிகாட்டலும் ஆலோசனைக்கும் பொறுப்பான ஆசிரிய ஆலோசகரும், இப்பாடசாலையின் EPSI இணைப்பாளர் ஜனாப்.எம்.ஏ.தாஹிர் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.




நிகழ்வுகளை ஆரம்பித்தவுடன் விவசாய இராஜாங்க அமைச்சினால் தரம் 1 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மரக்கன்றுகள் தொடர்பான விசேட விளக்கங்கள் பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் வழங்கப்பட்டதுடன், பாடசாலையிலும் இந்நிகழ்வின் நினைவாக ஒரு மரக்கன்று கோட்டக் கல்விப் பணிப்பாளர் அவர்களினால் நாட்டி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.



ஸாஹிறா வித்தியாலயத்தில் மாணவர்களை அறிந்து கொள்வோம் முதலாவது நாள் நிகழ்வு ஸாஹிறா வித்தியாலயத்தில் மாணவர்களை அறிந்து கொள்வோம் முதலாவது நாள் நிகழ்வு Reviewed by Editor on February 15, 2021 Rating: 5