முன்னாள் பிரதியமைச்சர் சஜித் அணியின் செயற்குழு உறுப்பினராக நியமனம்!!



(றிஸ்வான் சாலிஹூ)

வெளிவிவகார முன்னாள் பிரதியமைச்சர் நியோமல் பெரேரா இன்று (12) வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசாவால் ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி புத்தளம் மாவட்டத்தில் இருந்து முதல் முறையாக நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி அரசாங்கத்தில் வெளிவிவகார பிரதி அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னாள் பிரதியமைச்சர் சஜித் அணியின் செயற்குழு உறுப்பினராக நியமனம்!! முன்னாள் பிரதியமைச்சர் சஜித் அணியின் செயற்குழு உறுப்பினராக நியமனம்!! Reviewed by Editor on February 12, 2021 Rating: 5