(றிஸ்வான் சாலிஹூ)
சாய்ந்தமருதைச் சேர்ந்த தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை உத்தியோகத்தர் எம்.இஸட்.எம்.சாதிக் இன்று (13) சனிக்கிழமை மாரடைப்பால் காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
இவர் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் சாய்ந்தமருது பிரதேச பொறியியலாளர் காரியாலயத்தில் சாரதியாக கடமையாற்றியவராவார்.
கடந்த புதன்கிழமை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு பின்னர் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளையிலேயே அவர் இன்று காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
அம்பாறை தேசிய நீர் வழங்கல் சபையின் காரியாலயத்தில் கடமைபுரியும் எம்.இஸட். எம்.செய்னுடீன் (சாரதி) அவர்களின் அன்பு சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் வல்ல இறைவன் அன்னாரது பாவங்கனை மன்னித்து ஜன்னதுல் பிர்தெளஸ் எனும் உயரிய சுவர்க்கத்தை வழங்க பிரார்த்திப்போமாக ஆமீன்.
