
இலங்கை - பாகிஸ்தான் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவும்,செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன் அவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ஏ.அரவிந்த குமார் மற்றும் மொஹமட் முஸம்மில் ஆகியோர் இச்சங்கத்தின் உப தலைவர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
நட்புறவு சங்கத்தின் கூட்டம் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (23) செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெற்ற போதே நிறைவேற்றுக் குழு மற்றும் பதவிகளுக்கான புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களான கே.காதர் மஸ்தான், துஷார இந்துனில் அமரசேன, வைத்திய கலாநிதி சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே, மேஜர் சுதர்ஷன தெனிபிட்டிய, அலி சப்ரி ரஹீம், கனஹ ஹேரத், ஜகந் புஷ்பகுமார, ஜயந்த வீரசிங்ஹ, ஜகத் குமார, குலசிங்கம் திலீபன், வேலு குமார், பைசல் ஹாசிம், அமரகீர்த்தி அதுகோரல, மதுர விதானகே, சாமர சம்பத் தஸநாயக்க, உதயன கிரிந்திகொட, குணதிலக ராஜபக்ஷ, வைத்திய கலாநிதி திலக் ராஜபக்ஷ, ஜே.சி.அலவத்துவல, ரொஷான் ரணசிங்க ஆகியோர் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
February 24, 2021
Rating: