பள்ளிவாசல் சம்மேளனத்தின் பெயரில் போலி ஆவணம் தயாரித்து நிதி வசூலிப்பு!!!

பொதுமக்கள் அவதானம்.!

நேற்று அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் போது சட்டத்தரணியும் நண்பருமான சகோதரர் சாஜித் அவர்களிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு . . . 

அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத்தினால் அண்மையில் ஏதும் இருதய சத்திர சிகிச்சைக்கு நிதி திரட்ட ஏதேனும் கடிதம் கொடுக்கப்பட்டதா என்றார். 

ஏன் என கேட்ட போது சந்தேகத்திற்கிடமானவர்கள் காத்தான்குடியில் நிதி திரட்டுவதாக கூறினார். விபரத்தை முழுமையாக கேட்ட போது அந்த இடத்தை விட்டும் ஓடி விட்டதாக சொன்னார்.

குறித்த கடிதத்தின் பிரதியை அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத்தின் முன்னைய செயலாளர் ஹமீட் சேர் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது அவ்வாறு எந்த கடிதமும் கொடுக்கப்படவில்லை என கூறினார்.

பிறகு கடிதத்தை பார்த்த போது சில பிழைகள் தெளிவாக தெரிந்தது.!


1) தொலைபேசி இலக்கம் அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத்தினுடைய இலக்கமல்ல. தனிப்பட்ட ஒருவருடையது (இதுவரை தொடர்பு கொள்ள முடியவில்லை)

2) விலாசம் : பட்டின ஜும்மா பள்ளிவாசல் என குறிப்பிடப்பட்டிருந்தது. சம்மேளனத்தினுடைய பெரிய பள்ளிவாசல்

3) Letter head இன் நிறம் பச்சையாக நிறமாற்றப்பட்டிருந்தது.

4) கடிதத்தின் ஆரம்பத்தில் " மேற்பட்டி பள்ளிவாசல் நிர்வாகத்தினால்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

எமது மக்கள் உதவும் குணம் கொண்டவர்கள் அவர்களின் நற்பண்பை இவர்கள் கலங்கப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

நேற்று (2021.02.24) மாலை 4.00 மணியளவில் காத்தான்குடி பகுதியில் நிதி வசூலிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களை கண்டால் உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல் நிர்வாகத்தினருக்கோ அறிவிக்கவும்.

அனைத்து பள்ளிவாசல் சம்மேளனம் 
ஹமீட் சேர் - 0777 04 3000

இவர்களை போன்றவர்கள் செய்யும் வேலையால் தான் நல்லவர்கள் கூட உதவி செய்ய தயங்குகின்றனர். 

மோசடியில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்துவோம்.


உ.மு. தில்ஷான் 
பிரதி தலைவர்
பிரதேச இளைஞர் கழக சம்மேளனம்
அக்கரைப்பற்று
பள்ளிவாசல் சம்மேளனத்தின் பெயரில் போலி ஆவணம் தயாரித்து நிதி வசூலிப்பு!!! பள்ளிவாசல் சம்மேளனத்தின் பெயரில் போலி ஆவணம் தயாரித்து நிதி வசூலிப்பு!!! Reviewed by Editor on February 24, 2021 Rating: 5