அட்டாளைச்சேனை வைத்தியசாலைக்கு பணிப்பாளர் விஜயம்!!!!

(றிஸ்வான் சாலிஹூ)

இன்று (02) செவ்வாய்க்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்.ஜீ.சுகுணன் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே அவர் வருகை தந்துள்ளார்.



இக்கலந்துரையாடலில் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.முனாஸ்டீன், கல்முனை பிராந்திய திட்டமிடல் பிரிவு வைத்திய அதிகாரி, மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களும் இதில் கலந்து கொண்டனர்.
அட்டாளைச்சேனை வைத்தியசாலைக்கு பணிப்பாளர் விஜயம்!!!! அட்டாளைச்சேனை வைத்தியசாலைக்கு பணிப்பாளர் விஜயம்!!!! Reviewed by Editor on February 02, 2021 Rating: 5