முஷாரப் எம்.பியுடன் பலர் இணைவு

(றிஸ்வான் சாலிஹூ)


பொத்துவில் பிரதேசத்தின் எதிர்கால நலனுக்காக இணைந்து பணியாற்றுவதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பொத்துவில் தொகுதி  கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம் முஷாரப் அவர்கள் விடுத்த திறந்த அழைப்பை ஏற்று இன்று (02) செவ்வாய்க்கிழமை ஏராளமான பொத்துவில் பிரமுகர்கள் அவரோடு இணைந்து கொண்டுள்ளனர்.



குறிப்பாக கட்சி பேதங்கள் மறந்து பொத்துவில் பிரதேச சபையின் ஏனைய கட்சிகளின் பிரதேச சபை உறுப்பினர்கள், ஆலிம்கள், உத்தியோகஸ்தர்கள்,  புத்துஜீவிகள் என பலரும் சேர்ந்து பணியாற்ற இணைந்து கொண்டனர்.



அதனடிப்படையில் ஶ்ரீ.ல.மு.கா பிரதேச சபை உறுப்பனர்களான எம்.எஸ்.எம்.மர்சூக், எம்.எச். அப்துல் றஹீம், ஶ்ரீ.ல.சு.க. இன் பிரதேச சபை உறுப்பினர் எம்.அன்வர் சதாத் உள்ளிட்ட மேலும் பல அரசியல் பிரமுகர்களும் இணைந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முஷாரப் எம்.பியுடன் பலர் இணைவு முஷாரப் எம்.பியுடன் பலர் இணைவு Reviewed by Editor on February 02, 2021 Rating: 5