"உடற்பயிற்சி செய்து உடல் ஆரோக்கியம் பெறுவோம்" அக்கரைப்பற்றில் நடந்தேறியது!!!

 



(றிஸ்வான் சாலிஹூ)

உடற்பயிற்சி செய்வோம் உடல் ஆரோக்கியம் பெறுவோம் என்னும் தலைப்பில் உடற்பயிற்சியில் ஆர்வமுள்ளவர்கள் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு இன்று (14) ஞாயிற்றுக்கிழமை காலை 6.45 மணிக்கு அக்கரைப்பற்று Water park யில் இருந்து அக்கரைப்பற்று மணிக்கூட்டுக் கோபுரம் வரை நடை பவனியாக சென்று மீண்டும் ஆரம்பித்த இடத்தை வந்தடைந்தார்கள்.

அத்துடன் இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் இலைக்கஞ்சி, குரக்கன் கஞ்சி போன்ற காலை ஆகாரமும் வழங்கப்பட்டது.


இன்றைய நடைப்பயிற்சியில் அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசங்களை சேர்ந்த வைத்தியர்கள், பொறியியலாளர்கள், நிர்வாக சேவை அதிகாரிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

உடல் ஆரோக்கியத்தில் ஆர்வமுள்ள அனைவரையும் தினமும் நடைபெறும் நடைப் பயிற்சியில் கலந்துகொள்ள முடியும் என்று இதன் ஏற்பாட்டாளரும், ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தருமான எம்.எச்.எம். ஜெய்னுடீன் தெரிவித்துள்ளார்.

"உடற்பயிற்சி செய்து உடல் ஆரோக்கியம் பெறுவோம்" அக்கரைப்பற்றில் நடந்தேறியது!!! "உடற்பயிற்சி செய்து உடல் ஆரோக்கியம் பெறுவோம்" அக்கரைப்பற்றில் நடந்தேறியது!!! Reviewed by Editor on February 14, 2021 Rating: 5